ராபர்ட் த ப்ரூஸ்-I
லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது.
மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது.
சிறிது நேரம் காத்திருந்தபோது அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை கைவிடாது உழைத்தது! இந்த சிலந்தியின் செயல் அவனை மிகவும் பாதித்தது.
அன்று அவன் குகையிலிருந்து வெளிவந்து தம் வீரர்களிடம் முழங்கிய வாசகம் இன்னும் (சுதந்திரம் பெற்ற!) ஸ்காட்லாந்து மக்களின் நீங்கா நினைவுகள் ஆகும்.
“If at first you don’t succeed, try try and try again”
“முதன்முறை வெற்றிபெறவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்”

முயற்சியின் எதிரிகள்
முயற்சியொட முதல் எதிரி – சோம்பேறித்தனம். சரியா? பல பேர் இதை ஒத்துக்குவாங்கன்னு நான் நெனைக்கிறேன். ஆனாலும் யோசனை பண்ணினா இன்னும் சில விஷயங்கள் தெரிய வருது.
முயற்சியொட எதிரிகளை மொதல்ல வரிசைப்படுத்திட்டு அப்புறமா கொஞ்சம் விரிவா எழுதணும்னு ஆசை..
கொஞ்சம் சிந்தனையும் படிப்பும் இப்பொ அவசியமா இருக்கு….

முயற்சி கதை – 2
ரெண்டு தவளைங்க குதிச்சு குதிச்சு பொய்க்கிட்டு இருந்தது. அப்படியே விளையாட்டா தாவும்போது ரெண்டு தவளையும் ஒரு தயிர் பானைக்குள்ள விழுந்துடுச்சுங்க.ஒரு அஞ்சு பத்து நிமிஷம் ரெண்டு தவளையும் பானைக்குள்ளேயிருந்து வெளிய குதிக்க முயற்சி செஞ்சுதுங்க. ஆனாலும் உடனே அது முடியலை. ஒரு தவளை நம்பிக்கை இழக்க ஆரம்பிச்சு நீந்துவதை நிறுத்திருச்சு. தயிருக்குள்ள மூழ்கிப்போச்சு! ரெண்டாவது தவளை முயற்சிய கைவிடலை. எப்படியும் வெளியெ போயிடலாம்னு நீந்திக்கிட்டெ இருந்தது. அது கொஞ்சம் மூச்சு வாங்கி ஓய்வு எடுக்கணும்னு நெனைச்ச சமயத்துல ஒரு ஆச்சரியம் நடந்தது.
இவ்ளொ நேரமா நீந்துனதால வெண்ணெய் திரண்டு மிதந்துக்கிட்டு இருந்தது! அது மேல் ஏறி உக்காந்துகிச்சு. அப்புறமா, அங்கெயிருந்து ஒரே தாவுல வெளிய குதிச்சிடுச்சி!
முயற்சிதான் காரணம்!!

முயற்சி கதை – 1
ஒரு ஊர்ல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு வேலை செஞ்ச ஒரு தளபதிக்கு வயசாயிடுச்சு. வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. வித்தியாசமான ஒரு தேர்வு செய்யணும்னு நெனைச்சாரு. தளபதி தேர்வை கேள்விப்பட்டு பல பேர் போட்டி பொட முன் வந்தாங்க.ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ஒரு சின்ன விளக்கம் தந்தாரு. அதாவது – இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலொகத்துல செஞ்சது. இதுவரைக்கும் யாராலெயும் அதை திறக்க முடியலை. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் பேசினாரு. அந்த கதவை திறக்கிறவங்களுக்கு இதை கேட்ட அப்புறம் கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! இது என்ன? யாராலயும் திறக்க முடியாததில்ல ராஜா செய்ய சொல்றாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருக்காங்க. அவங்களாலயும் திறக்கமுடியாதது இல்லயா இது? நம்மால ஆகாது!! அப்டின்னு கிளம்பிட்டாங்க.
ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுக்கிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறக்கரவங்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறதா ராஜா எல்லார்கிட்டயும் சொன்னாரு. கதவை பார்த்த அப்புறம் நெறைய பேர் கஷ்டம்தான் என்ன பண்றது. எப்டி திறக்கறதுன்னு பக்கத்துல இருந்தவங்க கிட்ட பேசிக்கிட்டாங்க!
ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!
ராஜா அவனையே பாராட்டி தளபதி ஆகிற தகுதி உனக்குத்தான் இருக்கு. பல பேர் சொல்லுறதுனாலயும், ராஜா சொல்றாருங்கறதாலயும் முயற்சி செய்யாம இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!
முயற்சி செய்யற ஒரு வீரன் தான் என் மக்களுக்கு தளபதியா இருக்கணும் அப்டின்னாரு.