நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது!
நியாயத்தைதான் சொல்கிறேன்… எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?
- ஜெயக்குமார், தூத்துக்குடி
எவருடன் பேசுவதாக இருந்தாலும்… ‘வாருங்கள் கலந்து பேசுவோம்’ என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! ‘உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது’ என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!
உண்மையான ஞானி யார்? ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?
- சோமு, பாண்டிச்சேரி
‘சுயம்’ எனும் சொந்த ஆணவம் இல்லாதவனே ஞானி. தன்னை இழப்பதன் மூலமே ஒருவன் ஞானியாக முடியும். வானம் எப்படி இருந்தும் இல்லையோ… அதுபோல, ஞானியும் இருந்தும், இல்லாதவனாக இருக்கிறான்.
உங்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம்?
- பச்சமுத்து, வில்லியனூர்
பக்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் தன் வீட்டுக் குப்பைகளை, உங்கள் வீட்டின் முன் போட்டால் பொறுத்துக் கொள்வீர்களா? கோபப்படுவீர்கள்; அவனுடன் சண்டைக்குப் போவீர்கள்! ஆனால், அதே பக்கத்து வீட்டுக்காரன் நாள்தோறும் நம்மைச் சந்தித்து, நடிகர்- நடிகைகளின் அந்தரங்கம், ஊர்க் கதை மற்றும் அரசியல் கிசுகிசுக்களைப் பற்றிப் பேசும்போது அருவருப்பு அடைகிறோமா? இல்லை!அவர் என்ன செய்கிறார்? நம் மனதில் குப்பை கொட்டுகிறார். வீட்டில் குப்பை கொட்டினால் கோபப்படும் நாம், மனதில் குப்பை கொட்டுவதை வரவேற்கலாமா?
மனதில் குப்பை கொட்டும் நபரை வரவேற்கக் காத்திருக்கி றோம். வராவிட்டால் ஏங்குகிறோம். கட்டடங்களைக் குப்பை ஆக்குபவர்களைக் கடுமையாக எதிர்க்கும் நாம், மனதைக் குப்பையாக்குபவர்களை விரும்புவது ஏன்?
என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் இதுதான்!
என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?
- ராமமூர்த்தி, ஆதம்பாக்கம்
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்… இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?” என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ”அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு… இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!” என்றார்.